எவ்ளோ அக்கறை அண்ணாமலைக்கு… மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் : அமைச்சர் பொன்முடி விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 6:44 pm

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டிலான நோயாளிகள் காத்திருப்பு கூட மற்றும் கழிப்பறை கட்டிடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டலான நோயாளிகள் காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாட வேண்டும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். கர்நாடக தாய்மொழி மீது நமக்கு வெறுப்பு இல்லை. ஆனால் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்துகின்ற கூட்டம் அங்கே தமிழ் தாய் வாழ்த்து பாடி உள்ளனர்.

அதை அண்ணாமலையும் வரவேற்று இருக்க வேண்டும் அங்கே இருக்கிற பிஜேபி தலைவர் வரவேற்று இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருக்கும் பொழுது நடுவில் எழுந்து செல்வது ஒரு தவறான செயல் முன்னாள் அமைச்சராக இருந்தவர் அதனை செய்திருக்கிறார்.

இதை கண்டனத்துக்குரியது தமிழ் பற்று உள்ள தலைவர்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் பார்த்துக் கொள்வது தமிழ் தமிழுக்காக என சொல்லிக் கொண்டிருக்கிற அண்ணாமலை பிஜேபி அண்ணாமலைக்கு தமிழ் மொழி மீது எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது மைக்கில் கோளாறு வந்ததை சரிசெய்ய சென்றதாக அவர் கூறியுள்ளார். இதனை எல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தார்கள். இது மக்களுக்கு புரியும் என விழுப்புரத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 342

    0

    0