விஜய் அரசியலில் பயன்படுத்தி வரும் Bro என்ற வார்த்தை தற்போது பல முக்கிய தலைவர்களாலும் விமர்சிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை: What Bro என்பதே இப்போது சோசியல் மீடியாவையும் தாண்டி, அரசியலிலும் டிரெண்டிங்கில் உள்ளது. ஒரு செயல் அல்லது வார்த்தை அனைவராலும் ட்ரெண்ட் செய்யப்படுவதற்கு ஒரு ஊடகம் தேவை, அதுவே ஊடகத்தில் உள்ளவர்கள் என்றால் ட்ரெண்டிங்கிற்கு பஞ்சமே கிடையாது.
அப்படித்தான், சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய், தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் What Bro என்ற பதத்தைப் பயன்படுத்தினார். இது அங்கிருந்த தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்களால் ஆரவாரத்துக்கு உள்ளாக, அடுத்ததாக நாம் தமிழர் கட்சி மேடையில் ஒலித்தது.
திராவிடமும், தமிழ்த் தேசியமும் ஒன்று எனக் கூறியதால் அண்ணன் – தம்பி உறவை முறித்த சீமான், What bro? It’s Very Wrong Bro எனக் கூறி, தனது தொண்டர்களிடம் கைதட்டல் வாங்கினார். இந்த Bro அப்போதே சற்று வேகம் எடுக்க, மீண்டும் அந்த டிரெண்டிங் வார்த்தையைக் கையிலெடுத்தார் தவெக தலைவர் விஜய்.
மத்திய, மாநில அரசுகள் மறைமுகமாக ஒன்றாக இருந்துகொண்டு நடிப்பதைக் குறிப்பிட்டு விமர்சித்த விஜய், What bro? It’s Very Wrong Bro என்றார். இதனையடுத்து, விஜயின் இப்பேச்சு குறித்து அடுத்தடுத்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகளை எழுப்பினர் ஊடகவியலாளர்கள்.
இதையும் படிங்க: 22 வயது இளைஞருடன் உல்லாசம்.. கணவனுக்கு தெரியாமல் காரியத்தை கச்சிதமாக முடித்த மனைவி!
அவர்களும், விஜய் பாணியிலேயே What Bro? Practice What you Breath Bro? என் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூற, அக்கட்சியில் உள்ள எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ‘Bro அதெல்லாம் அவங்களே Answer பன்னுவாங்க Bro..’ என தனது கட்சிக்கு ஆதரவளித்துப் பேசினார்.
இது போதாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் விஜய் குறித்து எழுப்பிய கேள்விக்கு ’Sorry Bro.. Next Question Bro..’ என சிரித்துக் கொண்டே பதிலளித்தார். ஆனால், திரைத்துறையில் சக நடிகராகவும், தற்போது பாஜக பிரமுகராகவும் வலம் வரும் சரத்குமார், ‘What Bro? Why Bro?’ என ஆவேசமாகக் கூறியது மட்டுமல்லாமல், ஒருமையிலும் விஜயை விமர்சித்தார். இவ்வாறு இந்த Bro டிரெண்டிங் 2026 தேர்தலில் சத்தமாக ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் அல்லது ஹெலிகாப்டரில் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
லண்டனில் இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டு, முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளார். லண்டன்: சிம்பொனி இசையை…
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
This website uses cookies.