தமிழ் மொழியை காக்க திராணி இல்லாத விஜய் எப்படி மக்களை காப்பார் : கட்சியின் பெயருக்கு ஜேம்ஸ் வசந்தன் கடும் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 பிப்ரவரி 2024, 7:46 மணி
James
Quick Share

தமிழ் மொழியை காக்க திராணி இல்லாத விஜய் எப்படி மக்களை காப்பார் : கட்சியின் பெயருக்கு ஜேம்ஸ் வசந்தன் கடும் கண்டனம்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இதனிடையே விஜய் கட்சியின் பெயரில் பல பிழைகள் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். தமிழக வெற்றி கழகம் என்பதை வெற்றிக் கழகம் என இருக்க வேண்டும், க் சேர்க்காமல் உள்ளது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘தமிழக வெற்றி கழகம்’ இது அரசியல் பதிவு அல்ல. மொழிப்பதிவு. ‘வெற்றி கழகம்’ என்பது சரியா? அல்லது ‘வெற்றிக் கழகம்’ என்பது சரியா? எனக்கு இலக்கண அறிவு கிடையாது. ஆகையால், இதில் ஆழ்ந்த அறிவுகொண்டவர் விளக்கலாம். நான் அறிந்தவரை, அது ‘வெற்றிக் கழகம்’ என்றே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. வலிமிகும் இடங்களைக் கொஞ்சம் அலசி ஆய்ந்தபோது இது கண்ணில் பட்டது.

உடன் தொக்க தொகையில் ஒற்று ஆறாம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்க தொகை அமையாது. மற்ற 2, 3, 4, 5, 7 வேற்றுமைகளில் உருபும் பயனும் உடன் தொக்க தொகைகளில் வலி மிகும். (அ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும். எ-டு. கஞ்சி + தொட்டி = கஞ்சித் தொட்டி (கஞ்சியை ஊற்றி வைத்திருக்கும் தொட்டி.) வெற்றி + திருமகன் = வெற்றித் திருமகன் (வெற்றியைப் பெற்ற திருமகன்.) ‘வெற்றிக் கழகம்’ என்பது வெற்றியின் கழகம், வெற்றி பெறும் கழகம், வெற்றி அடையும் கழகம் என்கிற பொருளில்தானே இடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், வலி மிகுந்துதானே ஆகவேண்டும்? தேர்ந்தவர் உறுதிசெய்யலாம்! என தெரிவித்துள்ளார்.

கட்சிப் பெயரில் பிழை உள்ளது என தெரிவித்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும் வெற்றிக் கழக என க் வைத்து மாற்றி பதிவு செய்ய வேண்டும், மொழியை காக்க திராணி இல்லாதவர், எப்படி அந்த மொழி பேசும் இனத்தை காக்க முடியும் என பேசியுள்ளார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 326

    0

    0