வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனித எலும்புக்கூண்டு கண்டெடுப்பு : கொலை செய்து புதைப்பா? போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2022, 12:22 pm

நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிகாட்டுப் பகுதியில் மனிதனின் எலும்பு கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த மனிதனின் தலை, இடுப்பு எலும்பு, கால் உள்ளிட்ட மனிதனின் எலும்புகள் மற்றும் ஒரு ஜோடி காலணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் நாசரேத் போலீசார் பார்வையிட்டு எலும்புகளை கைப்பற்றி கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு யாருடையது ? கொலை செய்யப்பட்டு ஏதும் புதைக்கப்பட்டுள்ளதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும், நாசரேத் பகுதிகளில் கடந்த ஒரு வருடத்தில் காணாமல் போணதாக பதியப்பட்ட வழக்குகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
  • Close menu