விருதாசலத்தில் சொத்து பிரச்சனை முன் விரோதம் காரணமாக வீட்டின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு (மலம்) கலந்ததாக போலீசில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருதாசலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் மனைவி மகாலட்சுமிக்கும் கடந்த ஒரு வருடமாக சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில், வெங்கடேஷ் வீட்டில் குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசியதன் காரணமாக, சந்தேகத்தின் பெயரில் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது, வெள்ளை நிற பனியன் துணியில் மனித கழிவை (மலம்) துணியில் சுருட்டி உள்ளே போடப்பட்டது தெரிய வந்தது.
இதன் காரணமாக வெங்கடேஷ் அவரது அண்ணன் மனைவி மகாலட்சுமி இதனை செய்திருக்கலாம் என விருதாசலம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.
அண்ணன், தம்பி சொத்துப் பிரச்சனையில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.