மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது : மீறினால்… ரூ.15 லட்சம் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2023, 9:42 pm

சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி ஓயக்குவோர் மனிதர்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது. திறந்தவெளி நீர்நிலைகளில் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், யாரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது. கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி பணியாளர் உயிரிழக்க நேரிட்டால் 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.

வீட்டு உரிமையாளர், லாரி உரிமையாளர் ஆகியோர் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிஅறிவுறுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி