தாயின் மார்பில் எட்டி உதைத்த மகன்கள்.. 3 மணி நேர தாக்குதல்.. சேலத்தில் நடந்தது என்ன?

Author: Hariharasudhan
19 February 2025, 6:01 pm

சேலத்தில், தாயின் மீது எழுந்த சந்தேகத்தால், அவரைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவர், மகன்கள் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மேட்டூடையார்பாளையம் புதிய காலனியைச் சேர்ந்தவர்கள் பொன்னுவேல் (45) வசந்தி (38) தம்பதி. இவர்களுக்கு கவின் (20) மற்றும் 17 வயதில் என இரு மகன்கள் உள்ளனர். பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை செய்து வருகின்றனர்.

மேலும், 17 வயதான மகன், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலை செய்து வருகிறார். தாய் வசந்தி, கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், வசந்தி கடந்த நான்கு மாதங்களாக செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இளைய மகன் தாயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நம்பர் பிஸி என வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அவர், வீட்டிற்கு வந்து தாயின் செல்போனை எடுத்து, யாரிடம் பேசுகிறார் எனக் கண்டுபிடிக்கும் வகையில், அதில் பதிவாகியிருந்த செல்போன் எண்ணை ஒரு செயலி மூலமாக யார் என்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

Salem Murder

அதில், அந்த குறிப்பிட்ட எண்ணில் ராஜா என்ற பெயர் வந்துள்ளது. எனவே, அந்த ராஜா யார்? எனக் கேட்டு தந்தை மற்றும் மகன்கள் என மூவரும், வசந்தியிடம் கேட்டுள்ளனர். பினனர், நேற்று முன்தினம் காலையில் பொன்னுவேல், மனைவியை ஆபாசமாகத் திட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால், மூத்த மகன் கவின் மீண்டும் யார் அந்த ராஜா எனக் கேட்டு தாய் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், இளைய மகனும் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, அவரும் தாயை கடுமையாகத் தாக்கியுள்ளார். ஆனால் வசந்தி, யார் அந்த ராஜா என்பதை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், தாயின் மார்பில் மகன்கள் எட்டி உதைத்துள்ளனர். மேலும், அவரது தலைமுடியைப் பிடித்து சுவரில் மோதி தாக்கியுள்ளனர். இவ்வாறு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விட்டுவிட்டு தாக்குதல் நடத்தியதில், வசந்தி மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், வசந்தியின் தங்கை சுகந்தியை செல்போனில் அழைத்து, அம்மாவை அடித்துவிட்டோம், அவர் மயங்கி விழுந்துவிட்டார், உடனடியாக புறப்பட்டு வா என அழைத்துள்ளனர். இதன்பேரில், கணவர் ராமச்சந்திரனுடன் சுகந்தி வந்துள்ளார். பின்னர், அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: டி இமான் என்னை ஏமாத்திட்டாரு… வைக்கம் விஜயலட்சுமி வைத்த பகீர் குற்றச்சாட்டு!

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வசந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், இதுகுறித்த தகவல் கிடைத்த ஏத்தாப்பூர் போலீசார், வசந்தியின் கணவர் மற்றும் இரு மகன்களைக் கைது செய்தனர். மேலும், வசந்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தியதில், மகன்கள் தாக்கியதில் இதயம் முழுவதும் ரத்தம் கசிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, வசந்தியின் உடல் சுகந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

  • Famous Actress joined in Ajiths Good Bad Ugly அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!
  • Leave a Reply