முறுக்கு சுட்ட மனைவி.. தீ வைத்த கணவர்.. தவிக்கும் குழந்தைகளின் பரிதாபம்!

Author: Hariharasudhan
18 November 2024, 11:50 am

ராணிப்பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர்கள் பாலாஜி – சித்ரா தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பாலாஜியின் நடத்தையில் சித்ராக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பாலாஜியிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் சித்ரா, ராணிப்பேட்டை மாவட்டம், அய்யம்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் 2 குழந்தைகள் உடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (நவ.17) சித்ரா, தனது குழந்தைகளுக்காக வீட்டில் முறுக்கு சுட்டுக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது திடீரென பாலாஜி அங்கு வந்து உள்ளார்.

அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த பாலாஜி, தான் கொண்டு வந்த பெட்ரோலை சித்ரா மீது ஊற்றி உள்ளார். இதனால் அங்கு இருந்து தப்பிக்க சித்ரா முயற்சி செய்து உள்ளார். இருப்பினும், அவரால் முடியவில்லை.

POLICE STATION

பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் சித்ரா மீது நெருப்பை பற்ற வைத்து உள்ளார் பாலாஜி. அப்போது பாலாஜியை சித்ரா கட்டிப் பிடித்து உள்ளார். இதில் பாலாஜி மீதும் நெருப்பு பற்றி உள்ளது. இதில் அலறித் துடித்த சித்ரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு அச்சாரம் போடுகிறதா விசிக? ஸ்டாலின் போட்ட முடிச்சு!

அதேநேரம், இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், 60 சதவீத காயங்கள் உடன் இருந்த பாலாஜியை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 133

    0

    0