மனைவியுடன் உடலுறவு வைத்த முதலாளி.. ரகசிய வீடியோ எடுத்த தொழிலாளர்கள் : அலற விட்ட அந்தரங்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2024, 11:27 am

முதலாளி மனைவியுடன் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து தொழிலாளர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான நெட்டா பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் சுற்றுலா வேன் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்த இரண்டு வாகனங்களையும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நிலமாமூடு பகுதியை சேர்ந்த சங்கீத் 28, மற்றும் அருமனையை அடுத்த ஓடவள்ளி பகுதியை சேர்ந்த மிதுன் 26 ஆகியோர் டிரைவர்களாக பணிபுரிந்து வந்தனர்.

வெகு நாட்களாக இருவரும் தங்களிடம் வேலை பார்த்து வந்ததால் தம்பதியினர் இரண்டு இளைஞர்களையும் முழுமையாக நம்பி தங்களது உறவினர்கள் போல் நினைத்து தங்களது வீட்டிற்குள் இயல்பாக வந்து செல்லும் அளவிற்கு பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர்கள் இருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தம்பதியினரிடம் தகராறில் ஈடுபட்டு வேலையை விட்டு சென்றுள்ளனர்.

இவர்கள் வேலையை விட்டு சென்ற சில நாட்களில் தம்பதியினரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண்ணில் இருந்து ஒருமுறை பார்த்ததும் அழியக்கூடிய நிலையில் வீடியோ ஒன்று வந்துள்ளது.

இதனை தம்பதியினர் ஓப்பன் செய்து பார்த்தபோது அதில் தம்பதியினர் இருவரும் தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இந்த வீடியோ அனுப்பிய நபர் யார் என்று விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆனால் அவர்களால் அதை கண்டு பிடிக்க முடியாமல் மிகுந்த மன வருத்தத்தில் காணப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரது செல்போன் வாட்ஸ்அப்பிலும் அதே வீடியோ வந்துள்ளது.

இதையும் படியுங்க: மனைவி கர்ப்பம்.. எதிர்வீட்டு சிறுமியுடன் தவறான சகவாசம் : உயிரை பறித்த தகாத உறவு!!

இதனை கண்ட அந்த நபர் அந்த வீடியோ தனது செல்போனில் அனுப்பியது உங்களிடம் வேலை பார்த்து வந்த சங்கீத் என்று கூறி உள்ளார்.

காரணம் அந்த வீடியோ வந்த எண் அவருடைய போனில் ஏற்கனவே பதிவாகி இருந்துள்ளது. இதனை கொண்டு உறுதி செய்த அவர் தம்பதியினரிடம் கூறி உள்ளார்.

இதற்கிடையே தம்பதியினருக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் தங்களிடம் உங்களுடைய அந்தரங்க வீடியோ உள்ளது. அதனை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பத்து லட்சம் ருபாய் தரவேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளனர்.

முதலில் பயந்த தம்பதியினர் பின்னர் தைரியத்தை வர வைத்துக்கொண்டு வெள்ளறடா காவல்நிலையத்திற்கு சென்று இது சம்பந்தமான வாட்ஸப் ஆதாரங்களை காண்பித்து புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட வெள்ளறடா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சங்கீத் மற்றும் மிதுன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் இருவரையும் தேடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 467

    0

    0