அடிக்கடி சண்டை போட்டுகிட்டே இருந்த மனைவி…. கோபத்தில் கத்தி எடுத்து சரமாரியாக வெட்டிய கணவன் கைது..!!

Author: Babu Lakshmanan
25 May 2022, 11:59 am

சென்னை : கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (42). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு சுசீலா (38) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

சுசிலா தனது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக பொன்னேரியில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நந்தகுமார் தான் சம்பாதிக்கும் பணத்தை தனது உடன் பிறந்தவர்களுக்கும், அம்மாவுக்கும் செலவு செய்து வந்துள்ளார்.

இதனை அடிக்கடி தனது மனைவி தட்டி கேட்டுக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் இதே போன்று பிரச்சனை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி முதுகு மற்றும் இடது கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.

சுசிலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நந்தகுமாரை மடக்கி சுசீலாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி போலீசார் நந்தகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலத்த காயங்களுடன் சுசீலா ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!