’ஹலோ என் பொண்டாட்டிய நான் கொலை பண்ணிட்டேன்’.. போலீசுக்கு போன் போட்டுச் சொன்ன கணவர்!

Author: Hariharasudhan
7 December 2024, 6:48 pm

காஞ்சிபுரத்தில், பலருடன் தகாத உறவில் இருந்த தன் மனைவியை தானே கொலை செய்ததாக கணவர் காவல் நிலையத்துக்குச் சொல்லிவிட்டு தலைமறைவாகினார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர்கள் கோபால் ராஜ் – பரமேஸ்வரி (26) தம்பதி. இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கோபால் ராஜ் அதே பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று கோபால் ராஜ் தனது மனைவியை கழுத்தை நெறித்து, தானே கொலை செய்து விட்டதாக மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார், போனிலேயே விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Husband killed wife in Kanchipuram  in manimangalam limit

அப்போது, “தனது மனைவியான பரமேஸ்வரி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார். இதனை நான் பல முறை கண்டித்தும், எனது மனைவியின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவிலை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இந்த நிலையில் தான் எனது கைகளால் பரமேஸ்வரியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டேன்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கறிஞர்.. சென்னை மாநகரப் பேருந்தில் அதிர்ச்சி!

இவ்வாறு கொலை செய்த பின்னர் எனது இரு மகள்களையும் திருநின்றவூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, காவல் நிலையத்தில் வந்து சரணடையப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், தானே சரணடைவதாகத் தெரிவித்த கோபால் ராஜ், காவல் நிலையத்துக்கு வராமல் தலைமறைவாகி உள்ளார்.

Husband killed wife in Kanchipuram Manimangalam area

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற மணிமங்கலம் போலீசார், பரமேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், செல்போன் டவர் மூலம் கோபால் ராஜ் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!