மனைவியின் அந்தரங்க படங்களை அனுப்பிய கணவர்.. புதுச்சேரியில் அதிர்ச்சி!

Author: Hariharasudhan
27 November 2024, 3:15 pm

புதுச்சேரியில் மனைவியின் அந்தரங்கப் படங்களை அவருக்கே அனுப்பி மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரி, கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், யாரோ ஒருவர் என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் பல்வேறு ஆபாசப் படங்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக எனக்கும், என் உறவினர்களுக்கும் அனுப்பினார்.

அது மட்டுமல்லாமல், தான் சொல்லும் இடத்திற்கு தனிமையில் வர வேண்டும் என மிரட்டுகிறார் என புகாரில் கூறி உள்ளார். பின்னர், இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய சமூக வலைத்தளக் கணக்குகள் எந்த ஊரில் இருந்து பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் மூலம், செயலியானது செல்போன் மூலமாக செயல்படுவது என்பதை கண்டுபிடித்து, அந்த செல்போன் சிக்னல் மூலம் காஞ்சிபுரத்தைச் சார்ந்த பாண்டியன் (30) என்பவரை திண்டிவனம் அருகே போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை புதுச்சேரி அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பிடிபட்ட நபர் அந்தப் பெண்ணின் இரண்டாவது கணவர் என்றும், அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதும், காஞ்சனா, இதனை தங்கள் குடும்பத்தினரிடம் சொல்லி அவரைப் பிரிந்து தனியாக வந்து விட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

Cyber crime

மேலும், தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் உன்னை நான் அசிங்கப்படுத்தி விடுவேன் என்றும், இந்த புகைப்படங்களை காஞ்சனாவுக்கும், அவருடைய உறவினர்களுக்கும் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரகாஷ்ராஜ்..வைரலாகும் வீடியோ..குஷியில் ரசிகர்கள்..!

இதனையடுத்து, இணைய வழிச் சட்டத்தின்படி, பாண்டியனை காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஆபாசப் புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 340

    0

    0