4 வருஷமா எங்களுக்குள்ள ஒன்னுமில்ல.. சந்தையில் புடவையில் கணவர்.. அதிர்ந்த மனைவி

Author: Hariharasudhan
23 November 2024, 3:19 pm

மத்திய பிரதேசத்தில் தனது கணவர் ஒரு ஆண் இல்லை என அவரது மனைவி போலீசில் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 2020ஆம் ஆண்டு நவீன் என்பவர் உடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இவ்வாறு இவர்களுக்கு திருமணம் ஆன நாளில் இருந்து நவீன் தனது மனைவியிடம் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருந்து உள்ளார். குறிப்பாக, உடலுறவு வைத்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டே வந்து உள்ளார்.

எனவே, இதனை சில நாட்கள் கழித்து, அந்தப் பெண் நவீனிடம் கேட்டு உள்ளார். அதற்கு, தனக்கு உடல் நலப் பிரச்னை என்றும், அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி இப்படி இருப்பதாகக் கூறி உள்ளார். இந்த நிலையில் தான் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து உள்ளது.

அதன்படி, சமீபத்தில் அந்தப் பெண் சந்தை ஒன்றிற்குச் சென்று உள்ளார். அங்கு தனது கணவரான நவீன், சேலை அணிந்து கொண்டு, கையில் வளையல் அணிந்தபடி பெண் வேடத்தில் பிச்சை எடுப்பதைப் பார்த்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

Husband cheating wife

அந்தப் புகாரில், “என்னை ஏமாற்றி நவீன் என்பவர் திருமணம் செய்து கொண்டார். அவர் ஆண் இல்லை. அவர் மூன்றாம் பாலினமாக மாறி உள்ளார். எங்களது திருமணத்திற்கு பல லட்சம் ரூபாய் வரதட்சனையை தனது பெற்றோரிடம் வாங்கி உள்ளனர். ஆனால், தன் பாலினத்தை மாற்றி என்னை 4 வருடங்களாக நவீன் ஏமாற்றி வந்துள்ளார். இந்த 4 ஆண்டுகளில் எனக்கு உணவு கொடுக்காமல் குடும்பத்துடன் அடித்து, மேலும் வரதட்சனை கேட்டு துன்புறுத்தினர்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: உன்கிட்ட சொத்து இல்ல.. அப்போ இதச் செய்.. பாலியல் இச்சைக்கு அனுப்புவதாக மருமகள் புகார்

இது குறித்து விசாரித்தபோது, தனது தொழிலுக்காக பெண்கள் போல் வேடமிட்டதாக நவீன் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும், தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vijay Wishes To Atlee and Baby John Team என் தம்பிக்காக… வாழ்த்திய விஜய் : அட்லீ முதல் வருண் வரை!
  • Views: - 117

    0

    0