மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் பலி; என்ன நடந்தது?

Author: Hariharasudhan
7 November 2024, 1:44 pm

ராணிப்பேட்டையில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் உயிரிழந்த விவகாரம் சாதியப் பாகுபாடாக மாறியுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 46 வயதான இவரின் மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, காரில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லும் வழியில், மற்றொரு கார் மீது ராஜ்குமார் கார் மோதி உள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர்.

இதனையடுத்து, இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பு வைத்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் தனது மனைவியை ராஜ்குமார் அனுமதித்து உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கப்பட்டு உள்ளது. அப்போது ராஜ்குமாரும் சோர்வுடன் காணப்பட்டு உள்ளார்.

எனவே, அவரை மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கூறி உள்ளனர். அடுத்த சில நொடிகளில் ராஜ்குமார் சரிந்து விழுந்து உள்ளார். உடனடியாக, மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ராஜ்குமார் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே, இது குறித்து ராஜ்குமாரின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அப்டேட் இல்லாத ஆளு அவரு .. மா.சு. சூசகம்

தொடர்ந்து, பாராஞ்சி – சோழிங்கம் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காரணம், ராஜ்குமார் தனது ஊர் பெயரைக் கூறியதும் தான் ஆக்ரோஷமாக தாக்கியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இருப்பினும், ராஜ்குமாரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் காரணம் என்னவென்று தெரியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 294

    0

    0