சுத்தியால் மனைவி மீது கொடூர தாக்குதல்.. சாலையில் சடலமாக கிடந்த கணவர்.. கோவையில் பரபரப்பு!

Author: Hariharasudhan
13 December 2024, 6:44 pm

கோவையில், குடும்பத் தகராறில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த வினோபா நகரில் வசித்து வந்தவர்கள் தாஸ் – மம்தா தம்பதி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரம் அடைந்த தாஸ், பக்கத்து வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து வந்து, மனைவியின் தலையில் பலமாக தாக்கி உள்ளார்.

இதனையடுத்து, இதில் படுகாயம் இந்த மம்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து மம்தாவின் கணவர் தாஸ் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கொலை நடந்து 3 நாட்கள் ஆன நிலையில், கொலையாளி குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. எனவே, தனிப்படை அமைத்து போலீசார் தாஸைத் தேடி வந்தனர்.

Husband killed wife and he suicide in Coimbatore

இந்த நிலையில், நேற்று காலை பாலாஜி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு சடலமாக கிடந்தது, மனைவியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவர் தாஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ’ஏன் அவர் மீது வழக்கு பதியவில்லை?’.. போலீஸ் ஆவணங்களை கிழித்தெறிந்தாரா பாமக நிர்வாகி? கோவையில் பரபரப்பு!

பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் போலீசார் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தால் தாஸ் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறித்த முழுத் தகவலும் பிரேதப் பரிசோதனை முடிவிலே தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Saif Ali Khan attacked by Knife in his house at Mumbai பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!