3 வருடங்களாக கணவரின் நண்பர்கள் செய்த கொடூரம்.. இனி கெளரவம் வேண்டாம்.. பெண் பரபரப்பு புகார்!

Author: Hariharasudhan
9 January 2025, 2:27 pm

தனது கணவரின் இரண்டு நண்பர்கள் தன்னை 3 வருடங்களாக அவரது அனுமதியுடன் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக பெண் புகார் அளித்துள்ளார்.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட்டைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் தனது கணவரின் நண்பர்களால் கடந்த 3 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “என்னை பாலியல் வன்கொடுமை செய்ததை என்னுடைய கணவரின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அது மட்டுமல்லாமல், அந்த வீடியோவை என் கணவருக்கும் அனுப்பி உள்ளனர். அவர்களின் இந்த கேவலமானச் செயலுக்காக அவர்கள் இருவரும், என் கணவருக்கு பணம் அனுப்பியும் வந்துள்ளனர்.

இவ்வாறு பணம் பெற்றுக் கொண்ட எனது கணவர், அந்த வீடியோக்களை தானும் பார்த்துள்ளார். 3 வருடங்களுக்கு முன்பு, என் கணவர் சவுதியில் இருந்து இந்தியா வந்தார். அப்போது, தன்னுடைய 2 நண்பர்களை அவர் அழைத்து வந்தார். அந்த நபர்கள் என் கணவர் முன்பே, என்னை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர்.

Sexual assault by Husband's friends in Meerut UP

அவர்கள் இருவரும் நான் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே தற்போதும் இருந்து வருகின்றனர். இதனால் என் கணவர் இல்லாதபோதும், அவர்கள் இந்தக் கொடூர செயலில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். மேலும், அவற்றை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். மேலும், இது பற்றி என் கணவரிடம் நான் சொன்னபோது, அவர் அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, என்னை அமைதியாக இருக்கும்படி கூறினார்.

இதையும் படிங்க: ‘நீ ப்ளாக்குல சரக்கு விற்கனும்..’ போலீசே தற்கொலைக்கு காரணம்.. ராஜபாளையம் அருகே பரபரப்பு!

எப்படியோ இதனை நான் வெளியேச் சொன்னால், என் கணவர் என்னை விவாகரத்து செய்து விடுவேன் எனக் கூறி மிரட்டுவார். என்னுடைய குழந்தைகள் நலன் கருதியும், குடும்ப கௌரவத்தைக் கருதியுமே நான் இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால், இனியும் அப்படி இருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது 1 மாதம் கருவுற்றுள்ள அந்தப் பெண், கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானவர். அப்பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பெண்ணின் கணவர், சவுதியில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக உள்ள நிலையில், வருடத்திற்கு ஓரிருமுறை இந்தியா வந்து குடும்பத்துடன் இருந்து வந்துள்ளார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 89

    0

    0

    Leave a Reply