மனைவி கண்முன்னே அரசு பேருந்து மோதி கணவன் பரிதாப பலி : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2023, 4:20 pm

புதுவையை சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 65. இவரும் இவருடைய மனைவி அம்பிகா ஆகிய இருவரும் மேல் மலையனூர் கோவிலுக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது தீவனூரில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சாமி கும்பிட சாலையை கடக்க முற்பட்டபோது திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெங்கடேசலம் அவரது மனைவி கண் முன்பே உயிரிழந்தார் அம்பிகா படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து ரேசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது இதில் வெங்கடாசலம் தொலைபேசியில் பேசிக்கொண்டே சென்றது இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 364

    0

    0