மேஸ்திரியுடன் தகாத உறவு.. கணவனை நூதனமாக கொன்ற மனைவி!

Author: Hariharasudhan
21 December 2024, 3:19 pm

விழுப்புரத்தில் தகாத உறவைத் தட்டிக் கேட்டு வந்த கணவனை, மனைவி உள்பட 6 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம், வி.சித்தாமூரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (32) – தமிழரசி (25) தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை மற்றும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். மணிகண்டன் கட்டிட தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இரவு, விழுப்புரம் இந்திரா நகர் புறவழிச்சாலை அருகே இறந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து, இதுகுறித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில், தமிழரசிக்கும், செங்கல்பட்டு மாவட்டம் திருக்காச்சூரைச் சேர்ந்த சங்கர் (52) என்பவருக்கும் தகாத உறவு இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தமிழரசியையும், சங்கரையும் பிடித்து நடத்திய விசாரணையில், மணிகண்டன் தனது குடும்பத்துடன் கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அப்போது, அங்கு கட்டிட மேஸ்திரியாக சங்கர் என்பவர் இருந்துள்ளார்.

இந்த நிலையில்தான் சங்கருக்கும், தமிழரசிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கிப் பழகும் அளவுக்கு உறவு மாறி உள்ளது. ஒரு கட்டத்தில், இந்த விஷயம் மணிகண்டனுக்குத் தெரியவர மனைவியைக் கண்டித்துள்ளார். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

Extra marital issue husband killed wife arrested in Villupuram

ஆனால் தமிழரசி, சங்கருடன் அடிக்கடி செல்போனில் பேசி திருமணத்தை மீறிய உறவை வளர்த்து வந்துள்ளார். இதனால் மணிகண்டன், தமிழரசியை அடித்து உதைத்துள்ளார். எனவே, மணிகண்டன் மீது கடும் ஆத்திரம் அடைந்த தமிழரசி, சங்கரைத் தொடர்புகொண்டு மணிகண்டனை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, சங்கர், தனது உறவினர்களான திருக்காச்சூரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (25), அவரது மனைவி சுவேதா (21) மற்றும் தனது கடையில் பணியாற்றும் செஞ்சி அருகே கோணையைச் சேர்ந்த சீனிவாசன் (35) ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். இதன் பேரில், சம்பவத்தன்று மணிகண்டனை சுவேதா செல்போன் மூலம் தொடர்புகொண்டு, கட்டிட வேலை விஷயமாக பேசி முன்பணம் வாங்கிச் செல்லுமாறு, விழுப்புரம் இந்திரா நகர் புறவழிச்சாலை அருகில் வரவழைத்துள்ளார்.

அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மணிகண்டனை அழைத்து வந்த சுவேதா, கணவர் கார்த்திக்ராஜா, சீனிவாசன் மற்றும் கார்த்திக்ராஜாவின் நண்பர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மணிகண்டனிடம் கட்டிட வேலை விஷயமாக பேச்சுக் கொடுத்துள்ளனர்.

அதன் பின்பு, சுவேதா சற்று தூரம் தள்ளிச்செல்ல, 3 பேரும் அமர்ந்து மது அருந்தினர். இதனையடுத்த சிறிது நேரத்தில், மணிகண்டனின் கவனத்தை திசைத்திருப்பி, மதுபானத்தில் சயனைடைக் கலந்து குடிக்க வைத்துள்ளனர். அதைக் குடித்த மணிகண்டன் அடுத்த சில மணித்துளிகளில் இறந்துள்ளார். உடனே அங்கிருந்து 4 பேரும் தப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!

மேலும், இந்த நாளில் மணிகண்டன், தனது உறவினரான சற்று மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவனை, உடன் அழைத்துச் சென்றுள்ளார். அந்தச் சிறுவனை சுவேதா வேறு இடத்தில் அமரச் சொல்லிவிட்டு, கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து வந்த சிறுவன், மணிகண்டனைத் தேடியபோது அவர் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், அங்கிருந்த 4 பேரையும் காணவில்லை என்பதை, அச்சிறுவன் அப்படியே போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், சங்கர், தமிழரசி, சீனிவாசன், சுவேதா ஆகிய 4 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கார்த்திக்ராஜாவையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!