பிரசவத்துக்கு ஒரு நாள் தான் இருக்கு.. காதல் மனைவி கதற கதற துடி துடிக்க கொலை : ஷாக் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2025, 1:04 pm
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள மதுரவாடா பகுதியை சேர்ந்த ஞானேஸ்வர ராவ் , அனுஷா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் விசாகப்பட்டினம் நகரில் உள்ள மதுராவாடா காலனியில் வாடகைக்கு வீடு பிடித்து வசித்து வந்தனர். ஞானேஷ்வர் ஸ்கவுட்ஸ் சர்க்கிள், சாகர் நகர் வியூ பாயிண்ட் ஆகிய இரண்டு இடங்களில் துரித உணவு மையங்களை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அனுஷா கர்ப்பமான நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு சடங்கை ஞானேஸ்வர் மிகச்சிறப்பாக நடத்தினார்.
இந்த நிலையில் பிரசவ தேதி நெருங்க நெருங்க ஞானேஸ்வருக்கு அனுஷா மீது சந்தேகம் ஏற்பட தொடங்கியது. எனவே பிரசவ நேரத்தில் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டிய ஞானேஸ்வர் தொடர்ந்து சண்டையிட்டு அனுஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் பிரசவத்திற்கு 24 மணி நேரம் இருந்த சமயத்தில் நேற்று மனைவியிடம் மீண்டும் ஞானேஸ்வர் சண்டை போட்டுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஞானேஸ்வர் மனைவி அனுஷா கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதையும் படியுங்க: கயாடு மீது காதல்? படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்.. இதெல்லாம் தேவையா?
பின்னர் அனுஷா உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து அனுஷாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர்களை உடனடியாக வரச் சொன்னார்.
அனைவரும் அங்கு விரைந்து வந்து அனுஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அனுஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து அனுஷாவின் உடல் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விஷயம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் விரக்தியில் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஞானேஸ்வரை பிடித்து விசாரித்தபோது அனுஷாவை கழுத்தை நெரித்து கொன்றதாக ஞானேஸ்வர ராவ் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஞானேஸ் வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
