மனைவி மீது எழுந்த சந்தேகம்.. நள்ளிரவில் திடீரென சண்டை போட்ட கணவன்… அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…!

Author: Babu Lakshmanan
30 December 2023, 2:43 pm

தூத்துக்குடி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவர் தலைமறைவாகிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் புலிப்பாண்டி. 58 வயதான இவர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இரண்டாம் திருமணம் ஆக ராமலட்சுமி (44) என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளது. குழந்தைகள் வெளியூரில் படித்து வருகின்றனர். செல்வம் புலிப்பாண்டி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 ஆடுகளை விற்று பணத்தை வீட்டில் வைத்திருந்துள்ளார். நேற்று இரவு மனைவிக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது, தான் வீட்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. அது குறித்து ராமலட்சுமியிடம் அவரது கணவர் செல்வம் புலிப்பாண்டி கேட்டபொழுது, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த ராமலட்சுமியின் கழுத்தில் வீட்டிலிருந்த மண்வெட்டியால் செல்வம் புலிப்பாண்டி வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, செல்வம் புலிபாண்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர், அருகில் இருந்தவர்கள் இன்று காலை வரை ராமலட்சுமி வீட்டை விட்டு வெளியே வராத காரணத்தினால் உள்ளே சென்று பார்த்தபொழுது, அவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, இதுகுறித்து தப்பி சென்ற அவரது கணவர் செல்வம் புலி பாண்டியனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கணவர் மண்வெட்டியால் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 483

    0

    0