மனைவியை காரோடு எரித்துக் கொன்ற கணவர்.. நடுரோட்டில் பயங்கரம்!
Author: Hariharasudhan4 December 2024, 11:40 am
கேரளா, கொல்லத்தில் நடுரோட்டில் காரில் பெட்ரோல் ஊற்றி மனைவியைக் கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். 60 வயதான இவருக்கு அனிலா (44) என்ற மனைவி உள்ளார். இவர், பத்மராஜனின் 2வது மனைவி ஆவார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பத்மராஜன், கேட்டரிங் பணி செய்து வரும் நிலையில், மனைவியின் பேக்கரிக்கும் உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு இருந்து உள்ளது. இது ஒரு கட்டத்தில் உச்சம் தொடவே, கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு, மனைவி அனிலா தனது வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதன் பின்னர், மனைவியை பத்மராஜன் தேடி வந்து உள்ளார்.
இந்த நிலையில், நேற்று (டிச.04) இரவு 08.30 மணியளவில் கொல்லத்தில் உள்ள செம்மமுக்கு என்ற பகுதியில் காரில் அனிலாவும், மற்றொரு நபரும் சென்று உள்ளனர். இதனைப் பார்த்த பத்மராஜன், மற்றொரு ஆம்னி காரில் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று உள்ளார். பின்னர், செம்மமுக்கு என்ற பகுதியில் காரை வழிமறித்து நிறுத்தி உள்ளார்.
இதனையடுத்து, தான் கொண்டு வந்த பெட்ரோலை காரின் மீது ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளார். இதில் பலத்த தீக்காயங்கள் உடன் அனிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். அதேநேரம், அனிலா உடன் இருந்த நபர் படுகாயங்கள் உடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: மகளிர் பள்ளி கழிவறைக்குள் மாணவிகளுக்கு நடந்த கொடூரம் : தப்ப முயன்ற ஆசிரியருக்கு செருப்படி!
இதனிடையே, காருக்கு தீ வைத்து தனது மனைவியைக் கொன்ற பத்மராஜன், கொல்லம் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், பத்மராஜனைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக இவ்வாறு செய்ததாக கூறியுள்ள போலீசார், சிகிச்சை பெற்று வரும் நபருக்கு அனிலா உடன் என்ன தொடர்பு என்பதையும் விசாரித்து வருகின்றனர்.