3 உயிரைப் பறித்த ஆன்லைன் சூதாட்டம்.. தப்பிய கணவர்.. சேலத்தில் பரபரப்பு!

Author: Hariharasudhan
5 March 2025, 2:46 pm

சேலத்தில், ஆன்லைன் சூதாட்டைத்தில் பணத்தை இழந்த கணவர், தனது மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்: நாமக்கல் மாவட்டம், பெரியமணிலியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (40). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

இதன் பின்னர், சேலம் சாலையில் இருக்கும் பதி நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மனைவி மோகனப்பிரியா (33), மகள் பிரினிதி(6) மற்றும் மகன் ஒன்றரை வயதான பிரனிஷ் ஆகிய 3 பேருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அருகில் வசிப்பவர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, தூங்கும் அறையின் கீழே மோகனப்பிரியா, மகள் பிரினிதி மற்றும் மகன் பிரனிஷ் ஆகிய மூன்று பேரும் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Online Gambling death

இதனையடுத்து, உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் நகரப் போலீசார், மூன்று பேரின் சடலங்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அபாய கட்டத்தை தாண்டினார் கல்பனா… சுயநினைவு திரும்பியதால் விசாரணையை ஆரம்பித்த போலீஸ்!

இதன் பின்னர் நடத்திய போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரேம் ராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சத்தை இழந்துள்ளதும், இதனால் மனமுடைந்த அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதும் தெரிய வந்துள்ளது. எனவே, பிரேம் ராஜை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Leave a Reply