இறுக்கி மூடிய போர்வை.. 6 கண்களில் தெரிந்த ரத்த வெறி.. இன்ஸ்டாவால் நடந்த கொடூரம்!

Author: Hariharasudhan
12 December 2024, 1:42 pm

உத்தரப் பிரதேசத்தில் இன்ஸ்டாவில் மோகம் கொண்ட மனைவியை குழந்தைகளின் கண் முன்னால் கழுத்தறுத்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் அடுத்த லாக்வாயா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜு – சீமா தம்பதி. இவர்களுக்கு வன்ஷிகா (10), அன்ஷிகா (6) மற்றும் பிரியான்ஷ் (3) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அதிக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.

அதிலும், மனைவி சீமாவின் நடத்தை மீது ராஜுவுக்கு நிறைய சந்தேகமும் இருந்து வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சண்டையிட்டு வந்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், சீமாவுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்து உள்ளது.

Husband Kills cheating wife in Meerut UP for doubted

இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரீல்ஸ்களைப் பதிவிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில், அந்த ரீல்ஸ்களுக்கு பல்வேறு கமெண்ட்ஸ்கள் குவிந்து உள்ளன. அதேபோல், அறிமுகம் இல்லாத மொபைல் எண்ணில் இருந்து சீமாவுக்கு போன்கால்கள் வந்துள்ளன.

இதனால் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த ராஜு, இப்படி அதிகமான அழைப்புகள் வருவதை அறிந்து, மேலும் சீமாவிடம் முன்பை விட அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் தம்பதிகளுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: இந்தப் பழக்கங்களை ரெகுலரா ஃபாலோ பண்றவங்க எப்போதும் இளமையா தெரியுவாங்க!!!

இதனால் ஆவேசமடைந்த ராஜு, சீமாவை செங்கல்லால் அடித்துள்ளார். இதில், அவர் மயங்கி கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து, தன்னுடைய 3 குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி தூங்க வைத்து உள்ளார். ஆனால், குழந்தைகள் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, வெறுமனே கண்ணை மூடி படுத்துக் கொண்டனர்.

Husband Kills cheating wife in Meerut UP for Instagram love

இதனையடுத்து குழந்தைகள் தூங்கிவிட்டதாக நினைத்த ராஜு, சீமாவை கத்தியால் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். இதனை போர்வைக்குள் இருந்த 3 பெண் குழந்தைகளும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், மனைவியின் செல்போன் மற்றும் தன்னுடைய செல்போனையு எடுத்துக் கொண்டு ராஜூ அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சீமாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாகி உள்ள சீமாவின் கணவர் ராஜுவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!