கரண்டியால் அடித்தே மனைவியைக் கொன்ற கணவர்..விருதுநகரில் விபரீதம்!

Author: Hariharasudhan
7 January 2025, 12:21 pm

விருதுநகரில், குடும்பத் தகராறின் போது கரண்டியால் அடித்து மனைவியைக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் மேற்கு காலனியில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து தொழில் நடத்தி வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வீட்டில் இருக்கும் ராஜாத்திக்கு அடிக்கடி செல்போன் அழைப்பு வந்து கொண்டே இருந்துள்ளது. எனவே, ராஜாத்தி வீட்டு வேலைகளை சரிவர செய்யாமலும், அடிக்கடி போனிலும் பேசிக் கொண்டே இருந்ததாகத் தெரிகிறது.

இதனால் பார்த்திபனுக்கு, தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், நேற்று அதிகாலை வழக்கம் போல் கணவன் – மனைவிக்கு இடையே வேறு ஒரு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

Husband killed wife in Virudhunagar

இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பார்த்திபன், சமையலறையில் இருந்த கரண்டியால், ராஜாத்தியின் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜாத்தி அலறித் துடித்துள்ளார். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமைச்சருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை? உயிர் பலியான பிறகு நிவாரண நாடகமா?

ஆனால், அங்கு ராஜாத்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • AR Rahman about Anirudh கொஞ்சம் இத பண்ணுங்க அனிருத்.. ஆர்டர் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
  • Views: - 37

    0

    0

    Leave a Reply