தகாத உறவுக்கு தடை போட்ட மனைவி கொலை.. 5 வருடமாக காதலியுடன் உல்லாசமாக வாழ்ந்த கணவன்!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2024, 12:11 pm

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள வாகராயம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் விசைத்தறிப்பு தொழிலாளி இளங்கோவன் சம்பவத்தன்று தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் இளங்கோவனின் வீட்டு உரிமையாளர், அமிர்தராஜ் மற்றும் அவரது காதலி கலைவாணி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அமிர்தராஜ் வாகரயாம்பாளையம் பகுதியில் தனது மனைவி விஜயலட்சுமிவுடன் வசித்து வந்த நிலையில், அமிர்தராஜுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருடன் தொடர்பு இருந்தது தெரியவர, விஜயலட்சுமி அமிர்தராஜை கண்டித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அமிர்தராஜ், தனது மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு, தன் வீட்டில் குடியிருந்த இளங்கோவனை அணுகியுள்ளார்.

இதையும் படியுங்க: கோவிலில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை… பூசாரியின் கோரமுகம் : கோவையில் பகீர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு இளங்கோவன் மூலம் ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து லாரியை மீது ஏற்றி மனைவியை தீர்த்துக்கட்டிய அமிர்தராஜ், போலீசில் லாரி மோதியதில் விஜயலட்சுமி இறந்து விட்டதாக புகார் அளித்ததுடன், மனைவி பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டு தொகை 15 லட்சத்தையும் பெற்றுள்ளார்.

பின்னர் காதலி கலைவாணியுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமிர்தராஜ் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாடகை எதுவும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக அமிர்தராஜின் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் இளங்கோவன்.

Illegal Affair Murder

ஒரு கட்டத்தில் இளங்கோவனை வீட்டை காலி செய்யுமாறு அமிர்தராஜ் கூற, மனைவியை லாரியை ஏற்றி கொலை செய்தது குறித்து போலீஸிடம் தெரிவித்து விடுவேன் என இளங்கோவன் மிரட்டியுள்ளார்.

இளங்கோவன் விஜயலட்சுமியின் கொலை பற்றி வெளியில் சொல்லிவிடுவாரோ என பயந்த அமிர்தராஜ், தன் காதலி கலைவாணியுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து இளங்கோவனை கொன்றுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, அமிர்தராஜ், கலைவாணி மற்றும் சிறுவன் உள்ளிட்ட மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!