தூங்கிக் கொண்டிருந்த கணவனை கோடாரியால் வெட்டிக்கொன்ற மனைவி ; கடன் பிரச்சனை காரணமா..? போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
30 November 2022, 6:08 pm

கேரள மாநிலம் பாறசாலை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாறசாலை அருகே உதயன்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (60). இவரது மனைவி லூர்து மேரி. வழக்கம் போல, செல்லப்பன் (60) வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது, அவரது மனைவி லூர்து மேரி, கோடாரியல் கொடூரமாக வெட்டியுள்ளார்.

இதனால், படுகாயமடைந்த செல்லப்பனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டில் வந்து பார்க்கும் போது, அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், லூர்து மேரி தற்கொலை செய்ய முயன்ற நிலையில், பொதுமக்கள் பிடித்து பாறசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து, கடன் பிரச்சனையா..? அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவரா..?, வேறு ஏதாவது காரணமா..? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?