2 attempt தோல்வி.. 3வது முயற்சியில் காதல் கணவனைக் கொன்ற மனைவி!

Author: Hariharasudhan
27 November 2024, 5:55 pm

காஞ்சிபுரத்தில் காதல் கணவனை கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், புதுநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறது. இவர் 20 வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்து உள்ளார். இந்த தம்பதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

ரவி, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஜெயந்தி உடன் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்புகள் இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில், ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த ஜெயந்தி, சமையல் எண்ணெய்யைக் கொதிக்க வைத்து, தூங்கிக் கொண்டு இருந்த ரவி மீது ஊற்றி உள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரவி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இதனையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், ஜெயந்தியை கைது செய்தனர்.

Boiled oil throw to husband by wife in chennai and he died

மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆத்திரம் தாங்காமல் இதுவரை இரண்டு முறை கணவர் ரவியைக் கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்து உள்ளது. இதன்படி, ஒருமுறை சாப்பாட்டில் விஷம் வைத்தும், மற்றொரு முறை பீரோவை தள்ளிவிட்டும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதையும் படிங்க: 120 கி.மீ வேகம்.. மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பலி.. OMR-ல் எதிர்பாரா சம்பவம்!

ஆனால், இந்த இரண்டு கொலை முயற்சியிலும் தப்பிய ரவி, இறுதியாக கொதிக்கும் சமையல் எண்ணெய் ஊற்றியதில் துடிதுடித்து, சிகிச்சையில் இருந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்து உள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜெயந்தியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 139

    0

    0