ஊழல் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டும் திமுக ஊராட்சி மனற் தலைவியின் கணவர்… 6 கவுன்சிலர்கள் ராஜினாமாவால் பரபரப்பு?!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 2:22 pm

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு கோவிலாங்குளம் ஊராட்சியின் ஊராட்சிமன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ஜெயந்தி என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கோவிலாங்குளம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் 100 நாட்கள் வேலை திட்டம், சாலை அமைத்தல் உள்ளிட்ட அரசு திட்ட பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறியும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் , ஊராட்சிமன்ற கூட்டம் முறைகேடாக நடத்துவது, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற லஞ்சம் பெறப்படுவதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர்.

இந்நிலையில் முறைகேடு குறித்தும், முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி செயலாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேசியதால் தங்களை தகுதி நீக்கம் செய்வதாக ஊராட்சிமன்ற தலைவரின் கணவரும் திமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவராகவும் உள்ள முத்துராமன் தங்களை மிரட்டுவதாக கூறி வார்டு 1 உறுப்பினர் தனம், வார்டு 2 உறுப்பினர் ஜெயலட்சுமி, வார்டு3 உறுப்பினர் ஜெயக்கொடி, வார்டு 4 உறுப்பினர் பஞ்சு, வார்டு 9 உறுப்பினர் தங்கசாமி, வார்டு 12 உறுப்பினர் பாண்டியராஜன் ஆகியோர் இன்று தங்களது வார்டு பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வழங்கினர்..

இதை தொடர்ந்து மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் தலைமையில் உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இது குறித்து கேள்வி எழுப்பினால் தகுதி நீக்கம் செய்வதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாகவும் , மேலும் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான திமுக ஒன்றிய செயலாளர் முத்துராமன் தலையிட்டு வார்டு உறுப்பினர்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்

  • Good Bad Ugly Movie Utter Waste Said Celebrity வெறும் ரீல்ஸ் தான் இந்த படமே.. 20 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல : GBU படத்தை விமர்சித்த பிரபலம்!