வீட்டின் சமையலறையில் கருகிய நிலையில் சடலமாக கணவன் மீட்பு : கோவையில் சோகம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 11:01 am

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூர் பகுதியில் நேற்று இரவு நடந்த தீ விபத்தில் ஒரு நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகாய ஜெகன்ராஜ் (37) என்பவர் தனது மனைவியுடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெகன்ராஜ், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததால், மனமுடைந்த மனைவி சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

நேற்று இரவு 10 மணிக்கு அளவில், ஜெகன்ராஜ் வீட்டில் இருந்து தீப்புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஜெகன்ராஜ் சமையல் அறையில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜெகன்ராஜ் மதுபோதையில் வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

இருப்பினும், ஜெகன்ராஜ் தற்கொலை செய்தாரா அல்லது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ