தினம் தினம் டார்ச்சர்..மனைவியின் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்த கணவன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2025, 4:28 pm

மனைவி கொடுக்கும் டார்ச்சரை தாங்க முடியாத கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பீட்டர் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் திருமணமானது முதலே இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தினமும் இருவருக்கு சண்டை வருவதால் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் பிங்கி தனக்கு நஷ்டஈடாக ₹20 லட்சம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே மனைவியுடனான சண்டையில் வேலையை இழந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் பீட்டர் இருந்துள்ளார்,

ஆனால் மனைவியோ மனதளவில் மீண்டும் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான பீட்டர், இனி நாம் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன் என யோசித்து, கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அந்த கடிதத்தில், என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா, என் மனைவி தினம் தினம் என்னை டார்ச்சர் செய்கிறார், என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

Husband Was Tortured death by his wife

அவருடைய சித்ரவதை என்னால் தாங்க முடியவில்லை. இதனால் தினமும் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?