மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரண் : குடும்ப சண்டையால் விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 10:56 am

விழுப்புரம் : குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவர் திண்டிவனத்தில் தனியார் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இவரது மனைவி செல்வி (வயது 55) என்பவருக்கும் ஏழுமலைக்கும் இடையே இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மனைவி செல்வியை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அங்கிருந்து தப்பித்துச் சென்று திண்டிவனம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1480

    0

    0