கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. கேள்வி கேட்ட மனைவிக்கு வரதட்சணை கொடுமை : நடந்த விபரீதம்.. கணவனை நையப்புடைத்த உறவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 8:46 pm

தர்மபுரி : அரூர் அருகே கணவனின் கள்ளத்தொடர்பு மற்றும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சின்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருடைய மகன் ஆனந்த். லாரி ஓட்டுநரான இவருக்கும் சேலம் அருகே உள்ள வலசையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகள் கல்பனாவிற்கும் திருமணம் முடிந்து ஒன்பது வருடம் ஆகிய நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் இவர்களது குடும்பத்தில் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கல்பனாவின் பெற்றோர்கள் அவர்களுக்கு சொந்தமான இரண்டு வீடுகளை விற்று ஆனந்திற்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு இருசக்கர வாகனம் ஒன்றும் புதியதாக வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஆனந்த் சின்னாகுப்பம் பகுதியிலேயே வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருப்பதாகவும் இதை அறிந்த அவருடைய மனைவி கல்பனா அடிக்கடி தட்டி கேட்டுள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட இதுகுறித்து கிராமத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மனமுடைந்த கல்பனா விஷம் குடித்ததாக தெரிகிறது.

அதனையடுத்து அருகே இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது வரும் வழியிலேயே கல்பனா உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனந்த் மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவர் கூட மருத்துவமனைக்கு வராததால் கல்பனாவின் உறவினர்கள் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் இணைப்பை துண்டிக்கப்பட்டதாலும் இந்த இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறி கல்பனா தாமாக விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை, ஆனந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

கல்பனாவின் உடல் அரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக செய்து வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு ஆனந்தின் உறவினர்கள் அங்கு வந்தபோது கல்பனாவின் உறவினர்கள் அவர்களை கடுமையாக தாக்கிய சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 1053

    0

    0