குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் : மனைவி இறந்ததாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 2:28 pm

கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன் (வயது 27). கட்டிட தொழிலாளி இவரது மனைவி 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த பூபாலன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவியின் முதுகில் குத்தினார்.

இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். மனைவி இறந்து விட்டார் என்ற பயத்தில் இருந்த பூபாலன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிய நிலையில் கிடந்த மனைவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மனைவியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலை செய்து கொண்ட பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!