கணவன் கொலை.. இறந்ததே தெரியாமல் தவித்த மனைவி.. கையெழுத்து வாங்காமல் பிரேத பரிசோதனை… கதறும் குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 4:48 pm

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேல்நெல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.பிள்ளைகள் அனைவரும் பள்ளி படிப்பு படித்து வரும் நிலையில் சமையல் மாஸ்டரான இவர் ஆரணி அருகே உள்ள களம்பூர் கஸ்டம்பாடி பகுதியில் உள்ள முருகன் ஹோட்டல் என்ற கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

வார இறுதி நாட்களில் மட்டும் மேல்நெல்லி பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று வரும் ஆனந்தன் 27 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கடைசியாக தொலைபேசியில் உறவினர்களிடம் பேசியுள்ளார்.

மறுநாள் காலை உறவினர்கள் ஆனந்தனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது,”பெண் ஒருவர் போனை அட்டென்ட் செய்து ஆனந்தன் வேலை செய்து கொண்டிருக்கிறார்,”என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டதாகவும் பலமுறை, ஆனந்தனின் செல்போன் என்னை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்ததாகவும் ஆனந்தனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்வதறியாமல் பதறிப்போன உறவினர்கள், 29ஆம் தேதி வியாழக்கிழமை களம்பூர் கஸ்டம்பாடி பகுதிக்கு சென்று கணவர் பணிபுரிந்த ஹோட்டலில் விசாரித்த போது சரிவர பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். அங்கிருந்த மக்களிடம் ஆனந்தன் குறித்து உறவினர்கள் விசாரித்துக் கொண்டிருந்த வேளையில் சாலையோரம் ஆனந்தன் இறந்த நிலையில் இருப்பது தெரிந்துள்ளது. உடலை மீட்ட போலீசார் வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர், உறவினர்களுக்கு தெரியப்படுத்தாமல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டு ஆனந்தன் சாலையோரம் வீசப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் நேற்று ( 31ஆம் தேதி) வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உடலை வாங்காமல் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனந்தன் விபத்தினால் இறந்து விட்டதாகவும், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதை ஏற்க மறுத்த உறவினர்கள், உடல் முழுவதும் காயம் உள்ளது. கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யாத வரை உடலை வாங்க முடியாது என உடலை வாங்காமல் சென்றுவிட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மருத்துவமனை எதிரே மறியல் போராட்டம் நடத்துவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து ஆனந்தனின் உறவினர்கள் அளித்த பேட்டிகளில்,”கை கால்கள் எல்லாம் முறிக்கப்பட்டு கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எங்களின் கையெழுத்து இல்லாமல் பிரேத பரிசோதனை செய்துள்ளார்கள். கணவர் வேலை செய்த கடைகாரர் மீது சந்தேகமாக உள்ளது. கொலை செய்து வீசப்பட்ட நிலையில் விபத்து என போலீசார் சொல்கின்றனர். ஆட்சியரை சந்தித்து முறையிட சென்ற எங்களை நடுவழியில் வழிமறித்து போலீசார் செல்ல விடாமல் தடுக்கின்றனர். உடல் மீட்கப்பட்ட இடத்தில் விபத்து நடந்ததற்கான எந்த வித தடயங்களும் இல்லை. கால் மற்றும் கையை உடைத்து இருக்கிறார்கள். தம்பி இறந்து போய் ஆறு நாட்கள் ஆகிறது. எங்களுக்கு பணம் தேவை கிடையாது நீதிதான் வேண்டும்,”என கதறினர்

  • Aishwarya Rajesh Pushed away Meenakshi Chaudhary மேடையில் பிரபல நடிகையை தள்ளி விட்டு நடிகருடன் நெருக்கம் காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் : வைரல் வீடியோ!
  • Views: - 778

    0

    0