நானே ஒரு நோஞ்சான்.. அந்த அமைச்சர்தான் எனக்கு சத்து ஊசி போடுவாரு : அமைச்சர் எ.வ.வேலு சொன்ன தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2023, 9:19 pm

நானே ஒரு நோஞ்சான்.. அந்த அமைச்சர்தான் எனக்கு சத்து ஊசி போடுவாரு : அமைச்சர் எ.வ.வேலு சொன்ன தகவல்!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சேலத்தில் நடைபெறும் இரண்டாவது மாநில இளைஞரணி மாநாட்டிற்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர்களை சிறப்பாக வரவேற்க வேண்டும்,மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, மாநாட்டிற்கு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய காரணமாக இருந்தது திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டம்தான் இந்த மாநாடு பிரம்மாண்டமாக வருவதற்கு முன்மாதிரியாக இருந்தது திருவண்ணாமலை கூட்டம் தான் அதனை அமைச்சர் வேலு சிறப்பாக செய்திருந்தார் என பேசினார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, திராவிட இயக்கத்திற்கு ஐந்தாவது தலைமுறையாக அமைச்சர் உதயநிதி வந்துள்ளார். உலகமே வியக்கம் அளவிற்கு இரண்டாவது மாநில இளைஞரணி மாநாடுநடைபெற இருப்பதாகவும் அதற்கான மாநாடு பணிகளை அமைச்சர் நேரு சிறப்பாக செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்சில நேரங்களில் சில பிள்ளைகள் நோஞ்சான் போல் இருக்கும் என்னை போல… அவர்களுக்கெல்லாம் சத்து ஊசி போடும் மருத்துவர் போல் அமைச்சர் நேரு சத்து போட்டு உற்சாகப்படுத்துகிறார் என பேசினார்

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?