நானும் மனுசன் தான்… சாதாரண விஷயத்த இவ்ளோ பெரிசா ஊதிட்டாங்க : திருப்பூர் சுப்பிரமணியன் உருக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2023, 6:08 pm
நானும் மனுசன் தான்… சாதாரண விஷயத்த இவ்ளோ பெரிசா ஊதிட்டாங்க : திருப்பூர் சுப்பிரமணியன் உருக்கம்!!
சமீபத்தில் திருப்பூர் ஸ்ரீசக்தி திரையரங்கத்தில் தீபாவளி அன்று காலை சிறப்பு காட்சியாக திரைப்படங்களை திரையிட்டதாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்திந்த திருப்பூர் சுப்ரமணியம் தான் வகிக்கும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ,ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கம் ஆகிய சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது திரையரங்கில் தீபாவளியன்று தமிழக அரசின் சிறப்பு காட்சிகள் தொடர்பான விதிமுறைகள் ஹிந்தி திரைப்படத்துக்கு பொருந்தாது என நினைத்து காலை சிறப்பு காட்சியை எங்கள் திரையரங்கத்தினர் ஒளிபரப்பிவிட்டனர்.
நானும் மனிதன் தான் 100 சதவீதம் தவறில்லாமல் இருக்க முடியாது 10 சதவீதம் தவறு இருக்கதான் செய்யும். நல்ல பெயருடன் வெளியே செல்ல முடிவெடுத்து இம்முடிவை அறிவித்து வெளியேறுகிறேன் .
சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்தியிருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். அதனால் வெளியேறுகிறேன். இப்பதவியை வைத்து எனக்காக ஏதும் செய்து கொள்ளவில்லை .
ஒரு வருஷத்துக்கு முன்னாடியே என் மகன்களிடம் ஒப்படைத்து விட்டேன் எங்க ஐடி டீம் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் செய்துவிட்டனர்.
ஜப்பான் ஜிகர்தண்டாவுக்கு சிறப்பு காட்சி தொடர்பாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் ஹிந்தி படத்துக்கு குறிப்பிடபடவில்லை , அதனால் திரையிட்டுவிட்டனர். அதற்கு நான் பொறுப்பேற்கிறேன், எனவே இனி இந்த பொறுப்புகளில் இருந்து வெளியேறுகிறேன் என அறிவித்துள்ளார்.