நான் கனிமொழி எம்பி., உதவியாளரின் தம்பி.. கோவை போலீசை மிரட்டிய போதை இளைஞர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2024, 10:53 am

எம்பி கனிமொழியின் உதவியாளரின் தம்பி என கூறி போலீசாருக்கே மிரட்டல் விடுத்த போதை இளைஞரின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் வாகன தனிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில் தாறுமாறாக வந்த உயர் ரக கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மதுபோதையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் நான் யார் தெரியுமா? நீ என்ன பெரிய ஆளா? என்று கேள்வி கேட்டு மதுபோதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அந்த நபரின் செல்போனை போலீசார் பறித்ததாக தெரிகிறது. இதில் ஆவேசம் அடைந்த அந்த போதை ஆசாமி தான் தி.மு.க எம்.பி. கனிமொழியின், உதவியாளரின் சகோதரர் என்று கூறி போலீசாரை மிரட்ட ஆரம்பித்தார்.

அவருடன் வந்த ஒருவர் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் மீண்டும், மீண்டும் வந்து அட்ராசிட்டி ஈடுபட்டு வந்தார்.

இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
குடிபோதையில் வாகனம் இயக்கி சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினரை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் என்று சட்டம் பேசும் கோவை காவல் துறை மதுபோதையில் வாகனம் ஓட்டியதுடன், போலீசாரையும் மிரட்டும் இந்த போதை ஆசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ