அதிமுகவை பற்றி விமர்சிக்க எனக்கு தகுதியில்லை.. இருந்தாலும் WAIT AND WATCH…அமைச்சர் ரகுபதி ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2024, 1:17 pm

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் விமான கும்பாபிஷேக பாலாலய விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு வழிபட்டு தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளார்கள், இன்று கூட்டணியின் தயவு இல்லாமல் அவர்கள் ஆட்சியை நடத்த முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

நிச்சயமாக இது நிலைத்திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுனர்களுடைய கருத்தாக அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்பது மகத்தான வெற்றி. நான் ஒரு இடங்களுக்கு வருவோம் என்று சொன்னவர்கள் 234 இடங்களுக்குள் தான் பெற்றுள்ளனர்.

ஆனால் எங்களது கூட்டணி சிறப்பாக எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் இந்தியா கூட்டணி இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

மேலும் படிக்க: அண்ணாமலைக்கு முக்கிய பதவி? அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்? கசிந்த முக்கிய தகவல்!!

அது மகிழ்ச்சியான ஒன்றுதான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் 40க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து 40க்கு 40 என்ற சபதத்தை தமிழ்நாட்டில் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர். ஆனால் அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை.

ஆனால் திமுகவை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது. திமுகவை பற்றியும் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றியும் விமர்சிப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதி இருக்கிறது என்றால் அதிமுக பற்றி பேசுவதற்கு ரகுபதிக்கு நிச்சயம் தகுதி உண்டு.

அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழிசை சொன்ன குற்றச்சாட்டை தான் நாங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளோம் குற்றவாளிகளை பாஜக சேர்த்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். அதற்கு இன்று தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்கி வங்கி பாமக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்கு வங்கி தானே தவிர பாஜக தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை.

எங்களுடைய வாக்கு வங்கி என்றைக்குமே குறைவாகாது எங்களை பொறுத்தவரை வாக்குகள் சிதறி இருக்கின்றனவே தவிர நிச்சயமாக திமுக கடந்த முறை வாங்கிய வாக்குகளை தான் வாங்கி உள்ளோம். கடந்த முறை 24 இடங்களில் நின்றோம் இந்த முறை 22 இடங்களில் நின்றுள்ளோம் அதனால் அந்த சதவீதத்தை கணக்கிட்டுள்ளனர். அதனால் எங்களது கூட்டணி எப்போதும் பெற்றுள்ள வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டால் வரவேற்போம் அப்படி வரக்கூடியவர்களால் தமிழ்நாட்டிற்கு நல்லது கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தோடு வரவேற்போம் என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 266

    0

    0