கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தியில்லை : நிதியமைச்சர் பிடிஆர் பேச்சால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 6:11 pm

கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் நிதியமைச்சராக எனக்கு திருப்தியில்லை, கடத்தல்கள் அதிகமாக நடப்பதாக செய்திகள் வருகிறது என கூட்டுறவுத்துறை விழாவிலேய நிதியமைச்சர் குற்றட்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் மடீட்சியா அரங்கில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது : கூட்டுறவுத்துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது என்றாலும், தற்போதைய செயல்பாட்டு திறன் மற்றும் தகவல்தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்பட்டு கடத்தல் அதிகரிப்பதாக பல செய்திகள் வருகிறது.

கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கணிணி மயமாக்காமல் இருப்பதால் பல பிழைகள் நடைபெறுகிறது. நடமாடும் ரேசன் கடைகளில் உரிய நேரத்திற்கு செல்வதில்லை எனவும், நிதியமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை எனவும் தெரிவித்தார்.

எனது தாத்தா மற்றும் தந்தை கூட்டுறவு சங்கங்களில் தலைவராக இருந்துள்ளனர். எனக்கு கூட்டுறவுத்துறையில் தனிப்பட்ட ஆர்வம் உள்ளது. உலகளாவிய அளவில் நமது கூட்டுறவுத்துறை செயல்படும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எம்எல்.ஏ பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 488

    0

    0