இளைஞர்களுக்கு உத்வேகம் தரக்கூடிய தலைவரை இழந்தது எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு : கனிமொழி எம்பி உருக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2024, 6:22 pm

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரது மறைவு பற்றி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: நாட்டிலே இருக்கக்கூடிய மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி அவர்களுடைய மறைவு என்பது இந்த நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு.

மேலும் படிக்க: 200 திமுக ஜெயிக்கணும்… 34 தொகுதி எதிர்க்கட்சிகளுக்கு விட்டறணும் : இதுதான் நடக்கணும்.. அமைச்சர் துரைமுருகன்!

என்றுமே தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறாமல், அதே நேரத்தில் ஒரு அறிவார்ந்த விவாதங்களில், யாரும் மறுக்க முடியாத விவாதங்களை, எந்த காழ்ப்புணர்வும் இல்லாத விவாதங்களை முன் வைக்கக் கூடிய மிக முக்கியமான ஒரு தலைவர்.

இன்று அவர் மறைவு என்பது இந்த நாட்டிற்கும் பெரும் இழப்பாகும். மேலும்,தனிப்பட்ட முறையில் அவர்களுடன் பணியாற்றக்கூடிய பல்வேறு வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கிறது. இளைஞர்களுக்கு எப்போதும் உத்வேகம் தரக் கூடிய ஒரு தலைவர். அவரை இழந்திருப்பது, எனக்குத் தனிப்பட்ட முறையிலும் மிகப்பெரிய இழப்பாகக் கருதுகிறேன்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?