நாள் RSS சேவகன் என்பதில் எனக்கு பெருமை.. பாஜக வேகமாக வளர்கிறது : ஆளுநர் இல.கணேசன் பரபரப்பு பேச்சு!!!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2024, 9:17 pm
நாள் RSS சேவகன் என்பதில் எனக்கு பெருமை.. பாஜக வேகமாக வளர்கிறது : ஆளுநர் இல.கணேசன் பரபரப்பு பேச்சு!!!
மதுரையில் மாநில பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் எழுதிய தாத்தா தந்த கண்ணாடி என்ற நூலை ஜார்கண்ட மாநில கவர்னர் இல கணேசன் வெளியிட முதல் பிரதியை வேலம்மாள் கல்வி நிறுவனர் முத்துராமலிங்கம் பெற்று கொண்டார்.
அதன் பின்பு நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன்.பேசும் பொழுது,
பாரத நாட்டில் பரவலாக சொல்லக்கூடிய சில வார்த்தைகள் அவைகள் இது நமக்கு புதிதல்ல என கூறுகிறது.
இந்த புத்தகத்தில் உள்ள கருத்து மதசார்பின்மை என்ற கருத்து புதிதல்ல , முதலாளித்துவம், பொதுவுடமை இந்த கருத்துகள் எல்லாம் ஒவ்வொரு நூலாக வெளியிட வேண்டியவை இவைகள் நமக்கு புதிதல்ல
தேசத்தில் ஏற்கனவே கடைப்பிடிப்பதே புதிய தோற்றத்தில் வந்துள்ளது என்பதே காந்திஜி கருத்துகளை மேற்கோள் காட்டி இந்த புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது
நான் ஒரு RSS சேவகன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் சிறு வயதில் பாலகனாக இருக்கும் போதில் இருத்தே குடும்பத்தில் அனைவரும் RSS பணியாற்றிவருகிறேன். நான் 5ஆண்டு காலமாக முழு நேரமாக அமைப்பிற்காக நான் தந்துருக்கிறேன், தருவேன் என கூறிக்கொள்கிறேன்.
நான் RSS வாதி என்பதில் பெருமை கொள்கிறேன். 50ஆண்டுகாலம் முழு நேரம் அமைப்பிற்காக தருகிறேன். நான் ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது காந்திஜியை சுட்டுகொன்றவர்கள் நீங்கள் தான் என்று என்னிடம் காங்கிரஸை சேர்ந்த நபர் கூறியபோது அப்படி சொல்ல வேண்டாம் என அவரிடம் கூறினேன் எங்களை அவமானப்படுத்தனும் என்பதற்காக காந்திஜியை அவமானப்படுத்த வேண்டாம் என பதில் கூறினேன்
பாஜக வளர்ந்துகொண்டிருகிறது மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கும் வந்துவிட்டது . நாடு முழுவதும் மக்கள் காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருக்கிறது என அரசியல் நோக்கர்களும், வெளிநாட்டவர்களும் தெரிந்து பாரதநாடு காந்தியை கொன்றது சரி என கருகிறது என ஒரு முடிவுக்கு வந்தால் யாருக்கு அவமானம் என பதில் அளித்தேன்.
காந்திஜியை இவர்கள் கொன்றவர்கள் அல்ல : அதுமட்டுமல்ல காந்திஜியின் கருத்தை ஏற்று உண்மையாகவே ஏற்று பாடுபடுபவர்கள் என மக்களும் கருதுகிற காரணத்தால் தான் அந்த இயக்கம் (பாஜக) கொள்கை பேராதரவை பெற்று நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. காந்தியின் சித்தாந்தை படித்து பட்டம்பெற்றவர் ஸ்ரீனிவாசன் என்றார். நான் எந்த லட்சியத்திற்காக வாழ்கிறனோ அதனை மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்.
மகாத்மா காந்தியின் கருத்துகள் அது நிரந்தரமானது அவரை பல பேர் புரிந்துகொண்ட தவறான கருத்துகளை குறித்து அவர் சரியான கருத்துகளை கூறியுள்ளார்.
ஆனால் அவரது கருத்தை பின்பற்றுவோர் சிலர் மகாத்மாவின் கருத்தை அவர்கள் பின்பற்றும் கருத்துகளுக்கு ஏற்ப மகாத்மாவின் கருத்தை மாற்றிக் கொள்கிறார்களோ என தோன்றுகிறது என்றார்.
நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமை அடைகிறேன். நான் சார்ந்த இயக்கம் வளர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் ஆட்சி அமைத்து உள்ளது. நாட்டின் பல்வேறு சித்தாந்தங்கள் தாத்தா தந்த கண்ணாடி புத்தகத்தில் இடம் பெற்று உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டாக்டர் வடமலையான் புகழகிரி, பாத்திமா கல்வி நிறுவன தலைவர் ஷா, பேராசிரியர் ஆண்டியப்பன், மருத்துவர் ராமசுப்ரமணியன், எழுத்தாளர். பிரபாகரன், மதுரை மாவட்ட பாஜக பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், கிருஷ்ணன் பால கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் சுப்பா நாகுலு சரவணகுமார் வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் அய்யப்பராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.