எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்…இரவோடு இரவாக தமிழ்நாடு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய விஜயதாரணி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 12:47 pm

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்…,இரவோடு இரவாக தமிழ்நாடு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய விஜயதாரணி!!

விஜயதாரணி நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.

இந்த நிலையில், விஜயதரணி பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதாரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதிநீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயதாரணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 170

    0

    1