வானதி சீனிவாசன் வகித்து வரும் பதவியை கேட்டேன்.. ஆனால்.. டாப் சீக்கெரட்டை உடைத்த விஜயதாரணி!!
Author: Udayachandran RadhaKrishnan26 February 2024, 8:41 am
வானதி சீனிவாசன் வகித்து வரும் பதவியை கேட்டேன்.. ஆனால்.. டாப் சீக்கெரட்டை உடைத்த விஜயதாரணி!!
நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, தான் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன் என்ற காரணத்தை வெளிப்படையாக கூறினார்.
தனக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை வெளிப்படையாக கூறினார். தான் 37 வருடமாக கட்சியில் இருப்பதாகவும், கடந்து இரண்டு வாரமாக பாஜகவில் இணைய உள்ள செய்தி வருகிறது. ஆனால் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்.
ஒரு பெண் என்பதாலேயே பதவி கொடுக்க மறுக்கின்றனர் என்றும், நான் இரண்டு வாரமாக பாஜகவில் சேரப் போவதாக செய்திகள் வருகிறது, ஆனால் இந்த இரண்டு வாரமும் என்னிடம் யாரும் தொலைபேசியில் பேசவில்லை.
சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பேச நான் முயற்சி செய்வேன் ஆனால் சபாநாயகர் பேச அனுமதிப்பதில்லை. கடுமையாக போராடினால் தான் சட்டசபையில் பேசுவதற்கு அனுமதி கிடைக்கும்.
நான் எந்த நேரத்திலும் பிரதமரை விமர்சித்து பேசியது இல்லை. காங்கிரஸை ஆதரித்து பேசியுள்ளேன். அந்த நேரத்தில் என்ன நிலைப்பாடு இருக்கிறதோ அதனை நான் பேசியுள்ளேன். தப்பு எங்கு நடந்தாலும் தட்டி கேட்க தயங்கியதில்லை.
பாஜகவில் மக்கள் தளத்தில் பணியாற்ற எனக்கு அனுமதி தருவார்கள். வரும் தேர்தலில் எனது பொறுப்புகள் பணிகள் குறித்து பாஜக தலைவர் தான் அறிவிக்க வேண்டும்.
இத்தனை நாளில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது நிலைக்கு தான் உள்ளாக்கி உள்ளார்கள். காங்கிரஸ் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என்பதை சீமான் ஒத்துக்கிட்டார் அது உண்மை தான்.
பாஜக தேசிய மகளிர் அணி மைலா மோர்ச்சோ தலைவராக பாஜகவில் வானதி சீனிவாசன் இருக்கிறார். ஆனால் காங்கிரஸில் அந்த பதவிக்கு நான் என்னை பரிந்துரை செய்த போது இந்தி தெரிந்த ஒருவர் தான் நாங்கள் பரிந்துரைப்போம் என்று காங்கிரஸ் தலைமை கூறுகிறது.
இதுதான் அங்குள்ள நிலைமை என்று மிகவும் வெளிப்படையாக தனது குற்றச்சாட்டை முன் வைத்தார் தற்போதைய பாஜக பிரமுகர் விஜயதரணி.