கண்ட கண்ட ஜோக்கர்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது : டிடிவி தினகரன் தடாலடி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2024, 11:57 am
ttv
Quick Share

கண்ட கண்ட ஜோக்கர்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது : டிடிவி தினகரன் தடாலடி பேச்சு!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் திருமலைராயப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று சுவாமி திருமலைராய பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகளை நடத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து பூதேவி ஸ்ரீதேவி அம்மன்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளை செய்து திருமாங்கல்யத்தை அணிவித்து திருக்கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன் கூறுகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் ஏற்கனவே பிரமலைக்கள்ளர் சமுதாய் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது அரசு கள்ளர் பள்ளிகள் அதை எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ அதை மாற்றி அரசு கல்வித்துறையில் இணைக்க கூடாது என்பது பிரமலைக்கள்ளர் சமுதாய மக்களின் விருப்பம் அதை அரசு நிறைவேற்ற வேண்டும் அதனை கல்வித்துறையில் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்.

அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை வாட்டி வாட்டி வதைக்கின்றார்கள் ஏற்கனவே சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு, ஸ்டாம் உயர்வு, மின் கட்டண உயர்வு மேலும் பால் பொருட்கள் உயர்வு என்று எல்லா பொருட்களின் விலைவாசி வரியையும் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் .

அரசாங்கத்திற்கு வருமானம் வேண்டும் என்பதற்கு தேவையான வரிகளை விட்டு மக்கள் தலையில் வரிச் சுமைகளை ஏற்றுவது மிகவும் அபாயகரமான ஒன்று அதற்கு தமிழ்நாடு மக்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு நல்ல தண்டனை வழங்குவார்கள்.

போதைப் பொருள் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது ஆளுங்கட்சி, ஏற்கனவே ஆண்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எல்லோருக்கும் தொழிலே போதை பொருட்கள் கடத்துவது என்கின்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு கேட்டு கிடைக்கின்றது.

மேலும் படிக்க: லாட்ஜில் போதையில் 6 பேருடன் இருந்த பிரபல மாடல் அழகி.. போதைப் பொருள் வழக்கில் பரபரப்பு ட்விஸ்ட்!

இதற்கெல்லாம் தேர்தல் முடிவுக்குப் பின் நல்ல முடிவாக இருக்கும். மீண்டும் ஓபிஎஸ் அதிமுகவில் சேர்வார் என்ற ஒரு பேச்சு தற்போது வெளியாகியுள்ளது என்று கேட்டதற்கு கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன் என்று கூறி சென்றார்.

Views: - 132

0

0