முடியல…என்ன பண்ணாலும் கேட் போடறாங்களே… டிடிஎப் வாசனுக்கு மீண்டும் செக் வைத்த போலீஸ்..!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 2:35 pm

பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது.

இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து டிடிஎப் வாசன் டிடிஎப் பிட் சாப் (TTF Pit Shop) என்ற பெயரில் பைக் ரைடு செய்யும் நபர்களுக்கு தேவையான உபகரணங்களை விற்கும் கடையை திறந்தார்.

இந்நிலையில் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டிடிஎப் வாசனின் இருசக்கர வாகன கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: ரீல்ஸ் மோகத்தால் பறிபோன 18 வயது இளைஞரின் உயிர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

மேலும் டிடிஎப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்த போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ