நான் பாஜகவில் இணையவில்லை.. எல்லாம் கட்டுக்கதை.. சாகும்வரை அதிமுகதான் : பரபரப்பை கிளப்பிய முன்னாள் எம்எல்ஏ!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 8:36 pm

நான் பாஜகவில் இணையவில்லை.. எல்லாம் கட்டுக்கதை.. சாகும்வரை அதிமுகதான் : பரபரப்பை கிளப்பிய முன்னாள் எம்எல்ஏ!

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர்கள் எல்.முருகன், ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்கள், தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் மற்றும் திமுகவின் முன்னாள் எம்பி ஒருவர் அக்கட்சியில் இணைந்தனர்.

இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் (வலங்கைமான்), முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வடிவேலு (கரூர்), சேலஞ்சர் துரைசாமி (கோவை), பி.எஸ்.கந்தசாமி (அரவக்குறிச்சி), எம்.வி.ரத்தினம் (பொள்ளாச்சி), ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), ஆர்.தங்கராஜ் (ஆண்டிமடம்), வி.ஆர்.ஜெயராமன் (தேனி), எஸ்.எம்.வாசன் (வேடசந்தூர்), பி.எஸ்.அருள் (புருவனகிரி), ஆர்.ராஜேந்திரன் (காட்டுமன்னார்கோவில்), ஏ.ஏ.கருப்புசாமி (அவிநாசி), எஸ்.குருநாதன் (பாளையம்கோட்டை), செல்வி முருகேசன் (காங்கேயம்), ஏ.ரோகினி (கொளத்தூர்) உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக பாஜக தகவலையும் சொன்னது.

மேலும் அந்த பட்டியலையும் வெளியிட்டது. ஆனால் அதிமுகவின் அவிநாசி முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி இதை மறுத்துள்ளார். தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தான் சாகும்வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்றும், தன்னை பற்றி வருவது கட்டுக்கதை என்றும் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை அதிமுகவை சேர்ந்த கோவை சத்யன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?