எனக்கு சோறு போட்டுச்சு… இப்ப எங்க இருக்கானு தெரியல : காணாமல் போன ஆட்டோவை தேடி அலையும் ஓட்டுநர்.. திருட்டு போன காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 11:42 am

கோவை : கோவையில் காணாமல் போன தனது ஆட்டோவை ஓட்டுனர் ஒருவர் வீதி வீதியாக தேடி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 25 வருடமாக காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி பூ மார்க்கெட் பகுதியில் அமுதசுரபி உணவகம் எதிரே ஆட்டோவை நிறுத்தி விட்டு கணேசன் உணவு அருந்த சென்றுள்ளார்.

இந்த நிலையில் சரியாக 10 மணியளவில் மர்ம நபர் அவரது ஆட்டோவை லாவகமாக தள்ளிச் சென்று உள்ளார். அதன் பின்னர் கணேசன் பல்வேறு பகுதிகளில் ஆட்டோவை அலைந்து தேடியுள்ளார்.

பின்னர் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே காணாமல் போன ஆட்டோவை தேடி காந்திபுரம், கவுண்டம்பாளையம், வடகோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நடந்து ஆட்டோவை தேடி வருகிறார்.

இந்த நிலையில், தனது வாழ்வாதாரம் ஆட்டோ மட்டுமே என்றும், எப்படியாவது தனது ஆட்டோவை மீட்டுத்தர வேண்டும் என்றும் வேதனையுடன் தெரிவிக்கிறார் கணேசன்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?