எனக்கு புகழ் தேவையில்லை, இருக்கும் புகழே போதும் : உயிருள்ளவரை மக்களுக்காக உழைப்பேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2022, 5:29 pm

அரசு விழாக்கள் பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழாவே எங்களது புகழ் பாடுவே நடக்கும் விழாக்கள் அல்ல என்றும் மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் என ஈரோட்டில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.261.57 கோடி மதிப்பீட்டில் 135 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.183.70 கோடி மதிப்பில் 1,761 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு என்பது தமிழராகிய நாம் உணர்வோடு கலந்த ஊர் என்றும் பெருந்துறை அருகே திங்களுரில் தமிழ்சங்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது என்றார்.

சிலர் செய்யும் பணி அடக்கமாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும் என்ற ஸ்டாலின் கடந்த ஓராண்டில் காலத்தில் பல்வேறு துறைகள் சார்பில் எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்த பணிகளை பட்டியலிட்டார்.

10 கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மஞ்சள ஆராய்ச்சி மையம் மேம்படுத்தப்படும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என்றும் , ஈரோடு , தாளவாடி , நல்லாம்பட்டி , போன்ற பகுதிகளில் சுமார 6 கோடி மதிப்பில் குளிர்பாதன கிடங்கு அமைக்கப்படும் என்ற ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தை அனைத்திலும் முதன்மையாக மாற்ற பணிகளை செய்து வருவதாகவும் , அவினாசி – அத்திகடவு திட்ட பணிகளை பார்வையிட்டு துரிதமாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் , சில மாதங்களில் பணிகள் முடிவுற்று நானே தொடங்கி வைப்பேன் என்று உறுதளித்தார்.

அரசு விழாகள் பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழா அல்ல, எங்களது புகழ் பாடுவே நடக்கும் விழாகள் அல்ல என்றும் மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் , எனக்கு புகழ் தேவையில்லை என்றும் இருக்கும் புகழே போதும், என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக உழைப்பேன் என்றார்.

அனைத்து தர மக்களும் உயர்வு பெறும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்து மூலம் மக்களை மட்டுமல்ல மண்ணை காக்கும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது என்றும் தமிழக வரலாற்றில் வேளாண்துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியிட்டு சாதனை படைத்துள்ளதாகவும் , குறுவை சாகுபடிக்காக முன் கூட்டியே திறந்து கடைமடை பகுதி வரை நீர் செல்ல தூர் வாரப்பட்டுள்ளது என்றார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு உயர்நீதிமன்றம் சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதை அண்ணா, பெரியார் இருந்திருந்தால் சந்தோசம் அடைந்து இருப்பார்கள்.

இது நமது கொள்ககைக்கு கிடைத்த வெற்றி என்றார். திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியும் அரசாக வழங்கி வருவதாகவும் , இல்லம் தேடி கல்வி , பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் , வீடு தேடி மருத்துவம் என தமிழக திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருவதாகவும் , தமிழகத்தில் சிசு மரணம் குறைவு , பட்டினி சாவு இல்லை என்ற ஸ்டாலின் இதற்காக நித்தமும் உழைக்கிறேன் என்ற ஸ்டாலின், நான் வாழ்ந்த காலத்தில் தமிழ் சமுதாயம் நிமிர உழைப்பதாகவும் , கோட்டையில் இருந்தாலும் உங்கள் உள்ளங்களில் வாழ்கிறேன் என்று விழாவில் பேசினார்.

முன்னதாக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி , மு.பெ.சாமிநாதன் , கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu