50 வருஷமா அரசியல்ல இருக்கேன்.. அவர திருப்திப்படுத்தணும்னு எனக்கு அவசியமில்லை : நிதியமைச்சருக்கு அமைச்சர் ஐ பெரியசாமி பதிலடி!!
Author: Udayachandran RadhaKrishnan19 November 2022, 2:19 pm
கூட்டுறவுத்துறை வளர்ச்சியில் செயல்பாடுகளில் நிதி அமைச்சராக திருப்தி இல்லை என நீதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது குறித்த கேள்விக்கு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி பதில் அளித்துள்ளார்.
கூட்டுறவுத் துறையில் திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் மக்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் அதற்காக மட்டுமே பயணிக்கிறோம்.

மக்களை திருப்திப்படுத்தினால் போதும். ரேசன் கடையை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்க நிதியே கேட்கவில்லை.
முதலமைச்சர், துறை அதிகாரிகள் பொதுமக்கள் திருப்தியாக இருக்கும் போது ஒருவர் மட்டும் திருப்தி அடையவில்லை என்று கூறினால் எங்கு குறை உள்ளது என்பதை அவரிடமே கேளுங்கள் சுட்டிக் காட்டட்டும்.
வேலைவாய்ப்பு முதல் அனைத்து திட்டங்களையும் மக்கள் திருப்திப்படும் அளவிற்கு செய்து வருகிறது கூட்டுறவுத்துறை என அமைச்சர் ஐ பெரியசாமி பதிலடியாக தெரிவித்தார்.