வெட்கங்கெட்டவர்களை பற்றி பேசவே எனக்கு கேவலமாக இருக்கு : ஓபிஎஸ் குறித்து கே.பி முனுசாமி ஆவேசம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 9:23 pm

இந்தியாவை திரும்ப பார்க்கின்ற வகையில், வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், அதிமுக மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என்று கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரையில் மாநாட்டிற்கான இடத்தை கழக பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கழகத் துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, கழகத் தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் ,முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு, கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை சுற்றுச்சாலை அருகில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர் .அதனைத் தொடர்ந்து கழக துணை பொதுச்செயலாளர் கே.பி .முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அதிமுக வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில்  மூன்றாம் தலைமுறையாக ,ஒன்றரை கோடி தொண்டர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, ,வருகின்ற  ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கான  மூன்று இடங்களில் பார்த்துள்ளோம் .இதன் தொடர்பாக கழகப்பொதுச்செயளாலர்  எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். அவர் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாநாட்டிற்கான பணியினை துவக்கப்படும்.

திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில், ஏழை, எளிய அடித்தள மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. 

அம்மாவின் ஆட்சியில் கருவில் உள்ள குழந்தை முதல், கல்லறை செல்லும் மனிதர் வரை, வயதிற்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்களை செய்தோம் அந்த திட்டங்கள் எல்லாம் நீக்கியது தான் திமுகவின் சாதனையாகும். எந்த ஒரு புதிய திட்டத்தையும் திமுக கொண்டு வரவில்லை.

ஏற்கனவே நிதி அமைச்சர் பி.டி..ஆர் தியாகராஜன் ரெண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில், முதல்வர்  மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்த கருப்பு பணத்தை, எப்படி வெள்ளை பணமாக தடுமாறி கொண்டு வருகிறார்கள்  என்று  சொல்லி உள்ளனர்.

பன்னீர்செல்வம் ,சபரீசம் சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு , வெக்கங்கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக உள்ளது என கூறினார். நடைபெற்ற திமுக கூட்டத்தில் பிடிஆர் தியாகராஜனுக்கு ஸ்டாலின் பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்டதற்கு, இரண்டு ஆண்டு சாதனை என்று மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயற்சிக்கிறார் .அவர் அடிமனத்தில் பயம் வந்துவிட்டது. உண்மை சூடும் என்பது போல் ,பி.டி.ஆர் தியாகராஜன் மூலமாக இன்றைக்கு வெளிவந்துள்ளது. 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கேடாக உள்ளது. திமுகவினர் சட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். இது குறித்து கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் ஊடகங்கள் வாயிலாகும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் மக்களுக்கு கூறி வருகிறார்.

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு ரவுடிகள் உயர்ந்துள்ளனர். மணல் கொள்ளையில் திமுக நிர்வாகிகள் உள்ளனர். கண்டிப்பான முறையில் செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை  கொலை செய்துள்ளனர் .சட்டத்தை திமுகவினர் கையில் எடுத்துள்ளதால், கொலை செய்தவர் யார் இன்று இதுவரை கொண்டுவரப்படவில்லை என்று கூறினார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 401

    0

    0